search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு வேன்"

    • கல்லூரி மாணவருக்கு கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • கல்லூரி மாணவர் மீது சரக்கு வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் எம்.ஜி.புதூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மகன் யுவன்ஸ்ரீ (வயது 20), இவர் கோவை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்து நண்பருடன் பல்லடம் வந்த அவர் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வேன் அதிவேகமாக வந்து யுவன் ஸ்ரீ மீது மோதியது. அதன்பின்னரும் நிற்காமல் ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவருக்கு கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சரக்கு வேன் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவர் மீது சரக்கு வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வேன் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கியது.
    • இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவு உள்ளது. கர்நாடகா-தமிழகம் இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதி யாக திம்பம் மலைப்பகுதி விலங்கி வருகிறது.

    இங்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமாக லோடுகளை ஏற்று வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுது ஏற்பட்டு நின்று விடுவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை மைசூரில் இருந்து லோடுகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. 9-வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவற்றை இடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    பின்னர் பண்ணாரியில் இருந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சரக்கு வேனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    • கோடங்கிபாளையம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் பிரிவில் தனியாருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை செயல்படுகிறது. பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி ராசா கவுண்டம்பாளையம் என்ற இடத்தில் இரும்பு லோடை இறக்கிவிட்டு, கோடங்கிபாளையம் நோக்கி சரக்குவேன் சென்று கொண்டிருந்தது.

    வேனை பீகாரைச் சேர்ந்த ராம் பகதூர் பிஸ்வான் என்பவரது மகன் ராஜிவ் பிஸ்வான் (வயது 44), என்பவர் ஓட்டி சென்றார். வேனின் பின்புறம் பீகாரைச் சேர்ந்த ராம் கிஷான், பஸ்வான் மகன் பிரேம் பசுவான் வயது (24), மற்றும் தர்மேந்திர மோகியா (வயது 30), ஆகியோர் அமர்ந்திருந்தனர். கோடங்கிபாளையம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வேனில் இருந்த மூவரும் காயம் அடைந்தனர். அந்த வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சரக்கு வேனின் பின்புறம் மோதியது.
    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    கோவை தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு வேன் ஒன்று பல்லடம்- செட்டிப்பாளையம் ரோட்டில் மேற்கில் இருந்து கிழக்காக வந்து கொண்டிருந்தது.

    அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சரக்கு வேனின் பின்புறம் மோதியது. இதில் சரக்கு வேனும் காரும் பறந்து சென்று ரோட்டை விட்டு அருகே உள்ள காலி இடத்தில் விழுந்தன. இதில் சரக்கு வேன் ஓட்டுநர் கோகுல், உதவியாளர் ரமேஷ், மற்றும் காரில் வந்த சுஜித்,பரமேஸ்வரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர பாலத்தின் கீழ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • சரக்கு வேனில் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    பல்லடம் :

    பல்லடத்திலிருந்து சரக்கு வேன் ஓன்று கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு கேரளா சென்று விட்டு மீண்டும் பல்லடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை கமுதியை சேர்ந்த குமரவேல் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார்.

    ஆரோக்கியசாமி(38) என்பவர் உடன் வந்துள்ளார். இந்தநிலையில் சரக்கு வேன் பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் க.அய்யம்பாளையம் என்ற இடம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர பாலத்தின் கீழ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் சரக்கு வேனில் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை முன்னே சென்று கொண்டிருந்த கார் ஓன்று திடீரென பிரேக் போட்டதால், அதன் பின்னே வந்த மற்றொரு கார், மற்றும் சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

    இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அக்கம்- பக்கம் உள்ளவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • பல்லடம் போலீசார் சரக்கு வேனை ஓட்டி வந்த கோவையைச் சேர்ந்த பிரதீப்ராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    பல்லடம்:

    கோவையிலிருந்து பல்லடத்திற்கு வாகன உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை கோவையைச் சேர்ந்த பிரதீப்ராஜ்(வயது 38) என்பவர் ஓட்டிவந்தார். இந்த நிலையில் சரக்கு வேன் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்பல்லடம் அண்ணா நகர் பகுதியில் வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடி அங்கிருந்த பேக்கரி கடைக்குள் புகுந்தது. இந்த நிலையில், அங்கு தேநீர் அருந்திக் கொண்டிருந்த, மணிகண்டன்(75), ரங்கசாமி(47) , தங்கபாண்டி(36) ஆகியோர் மீது மோதியதில் 3பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்- பக்கம் உள்ளவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார், மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் இருந்து வேனை அகற்றினர். இதற்கிடையே, பல்லடம் அரசு மருத்துவமனையில் மணிகண்டனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பலத்த காயமடைந்த ரங்கசாமி மற்றும் தங்கபாண்டியன் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சரக்கு வேனை ஓட்டி வந்த கோவையைச் சேர்ந்த பிரதீப்ராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் அந்தப் பகுதியில் இருந்தவர்கள், வேன் டிரைவர் பிரதீப் ராஜை தாக்கினர். போலீசார் அவரை மீட்டனர். இந்த நிலையில் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் அண்ணாநகர் பகுதியில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி நேற்று மாலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து அங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     பல்லடம் :

    கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஓன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடம் அருகே சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் வேன் நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த குமரேசன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சரக்கு வேன் மோதி கூலி தொழிலாளி பலியானர்.
    • விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

    சேலம்:

    சேலம் திருவாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65), கூலி தொழிலாளி.

    இவரது மகன் வீடு பள்ளப்பட்டியில் உள்ளது. சம்பவத்தன்று, மகனை பார்ப்பதற்காக பழனிச்சாமி, பள்ளப்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் டிரைவர், பழனிச்சாமி மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். இதில் பின்னால் வந்த அரசு விரைவு பஸ் சரக்கு வேன் மீது மோதியதில், வேன் நிற்காமல் சென்று பழனிச்சாமி மீது மோதியது. இந்த விபத்தில் பழனிசாமி சம்பவ இடத்திலே பரிதாமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி போலீசார் பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.

    • நேற்று சரக்கு வேன் ஒன்றில் பணியாளர்கள் கற்களை எடுத்து சென்றனர்.
    • டிரைவர் பிரேக்கை அழுத்தியபோது, வேன் பின்னோக்கி வந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத் துள்ள பர்கூர் மலைப்பகுதி தேவர்மலை என்ற கிராமத்தில் செந்தில் என்பவரின் நிலத்தை சுற்றி வேலி கற்களை அமைப்பதற்காக நேற்று சரக்கு வேன் ஒன்றில் பணியாளர்கள் கற்களை எடுத்து சென்றனர்.

    பர்கூர் மலைப்பகுதி, கடைஈரெட்டி என்ற மலைகிராமம் அருகே சரக்கு வேன் மேடு ஏறும்போது டிரைவர் பிரேக்கை அழுத்தியபோது, வேன் பின்னோக்கி வந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அந்தியூர் அருகே உள்ள கரட்டூர் பகுதியைச் சேர்ந்த குமார் (46), ஜோசப் (42), மாரிமுத்து (40) ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

    வாகனத்தை ஒட்டிச் சென்ற முருகன் (42) மற் றும் உடன் சென்ற சண்முகம் (60) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.

    இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக 5 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திக் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் எடுத்து வந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி வந்ததாகவும் அதனை தனித்தனி குடோன்களில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் கோடங்கிபாளையம் பகுதியில் வேனில் வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் பாப்பம்பட்டி, பெரியகுயிலி மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியம் பூசாரிபாளையம் ஆகிய பகுதிகளில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் 5 வேன்களை கைப்பற்றினர்.இதில் சம்பந்தப்பட்ட பல்லடம் மாணிக்காபுரம் கோல்டன் சிட்டி சுயம்புலிங்கம் மகன் அரவிந்த்ராஜ்(25) , கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஜான்சன் மகன் ஜான் சஜு(30), திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டியை சேர்ந்த மணி மகன் கவின்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 2109 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    பள்ளிபாளையம்:

    திருச்செங்கோட்டில் இருந்து நூல்பாவு ஏற்றி கொண்டு சரக்கு வேன் ஒன்று பள்ளிபாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்துக்கு வந்தது. பள்ளிபாளையம் அலமேடு அருகே மேம்பால கட்டுமான பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

    இதனால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சேற்றில் சரக்கு வேன் சிக்கி, கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நூல்பாவுகளை அப்புறப்படுத்தி, சரக்கு வேனை மீட்டனர். இதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    ×